Live to the fullest...

Friday, May 1, 2020

பாகிஸ்தான்-அரசியல் வரலாறு : Book review

பாகிஸ்தான்-அரசியல் வரலாறு : Book review 


" ஜின்னா இத்தனை சீக்கீரம் இறந்துவிடுவார் என்று தெரித்திருந்தால், பிரிட்ஷ் கவர்ன்மென்ட் பாகிஸ்தான் பிரிவினைக்கே சம்மதித்திருக்காது."
                             - மவுண்ட்பேட்டன்
 காலம், என்ன கொண்டுவரும் என்று எவராலும் யூகிக்க முடியாதொன்று.
ஜின்னா இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் பாக். ஒரு நல்ல வலுவான ஜனநாயகமாக திகழ்ந்திருக்கும். இன்று பாக்.கின் நிலைமை, ஜின்னாவின் கனவுகளுக்கு எல்லாம் நேர்மறையாக இருக்கிறது.
    பாக்.கின் வரலாறு , ஆட்சியாளர்களின் சிறு குறிப்பு , ஏன் நம் இருவருக்கும் பகை, போர்களின் பின்னனி, காஷ்மீரில் வன்முறை, போன்ற  பல தகவல்களை பதிவு செய்கிறார் பா.ராகவன். 
    ஜனநாயகத்தில், சர்வாதிகாரி ஆட்சி முறையை, இங்கு தான் காண்பீர். பாகிஸ்தானின் இந்த பரிதாப நிலைமைக்கு காரணம், ஆட்சியாளர்கள் மட்டும்தான். 
• அடிக்கடி ஆட்சி  கைமாற்றமா? 
• பாகிஸ்தான், ஒரு ஏழை நாடாக இருப்பினும் , அதன், அரசியல்வாதிகள் மட்டும் செல்வம் செழிப்பாக இருப்பது ஏன் ?
•உண்மையாக , பாகிஸ்தான், தீவிரவாதத்துக்கு துணையாக இருக்கிறதா ? 
•காஷ்மீரை வைத்து அரசியல் செய்கிறார்களே ஏன் ?
• ஏன் அடிக்கடி ஆட்சிமாற்றம் வருகிறது? 
• ISI வின் பங்கு என்ன ? 
• ISI க்கும் IB க்கும் என்ன வித்தயாசம் ? 
• ராணுவம் ஏன் ஆதிக்கம் செலுத்தியது?
• பங்களாதேஷில், பாகிஸ்தான் ராணுவத்தால் நடந்த கொடுமைகள் என்ன? 
என்ற பல கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் ஆசிரியர். ஆர்வமுள்ள, எளிய நடையில் உள்ளது இந்த புத்தகம். 
எடுத்தால், கீழே வைக்க முடியாது. 
   நமது அண்டை நாடான பாகிஸ்தானின் வரலாற்றை அறிவது, முக்கியமான ஒன்று . அதற்கான ஒரு நல்ல வாய்ப்பு , இந்த 170 பக்கங்கள் உள்ள சிறிய புத்தகம். விரைவில் படித்து விடலாம்.
‌‌

2 comments: